|
| டெல்லி துணை கமிஷனர் ராஜ்பீர் சிங் சுட்டுக்கொலை |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 25 மார்ச் 2008 ( 11:11 IST ) | |
டெல்லி போலீஸ் துணைக் கமிஷனரும், 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று அழைக்கப்படுவருமான ராஜ்பீர் சிங், குர்கானில் ரியல் எஸ்டேட் தொழில் புரிந்துவரும் ஒருவரால் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக குர்கான் போலீஸ் கமிஷ்னர் மொகீந்தர் லால் இன்று கூறுகையில், ராஜ்பீர் சிங்கை சுட்டுக்கொன்ற விஜய் பரத்வாஜ் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், மெரவுலி - குர்கான் சாலையிலுள்ள தனது அலுவலகத்தில் தனியாக இருந்தபோது ராஜ்பீர் சுட்டுக்கொல்லப்பட்டதாவும் தெரிவித்தார்.
இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய அவர், இந்தக் கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி, இதர தகவல்களை அளிக்க மறுத்துவிட்டார்.
ராஜ்பீரைக் தாம் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ள விஜய் பரத்வாஜ், தன்னிடம் பணம் கேட்டு ராஜ்பீர் மிரட்டி வந்ததாகவும், பணம் தர மறுத்தால் கொன்றுவிடுவதாக கூறி வந்ததால், அவரை தாம் சுட்டுக்கொன்றதாகவும் கூறினார்.
ராஜ்பீர் சிங்கின் உடல் பிரதேசப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.
கடந்த 1982-ல் சப் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற ராஜ்பீர் சிங் தனது 'என்கவுன்டர்' திறமையால் படிப்படியாக பதவி உயர்வு பெற்றவர். இவர், இதுவரை 50-க்கும் மேற்பட்ட என்கவுன்டர்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|