|
| புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது |
| புதுச்சேரி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008 ( 17:34 IST ) | |
பரபரப்பான அரசியல் நிகழ்வுகளுக்கிடையே புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்ட தொடர் நாளை தொடங்குகிறது. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்ட தொடரின் முதல் நாளான நாளை, கவர்னர் போபிந்தர் சிங் (பொறுப்பு) உரையாற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. 27 ம் தேதி 2008-09ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
முதலமைச்சர் ரங்கசாமியே நிதி இலாகாவையும் வைத்திருப்பதால் அவரே நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
முதலமைச்சருக்கு எதிராக 5 அமைச்சர்கள் செயல்படுவது, 2 அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள விவகாரம் போன்றவை விசுவரூபம் எடுத்து உள்ள பரபரப்பான சூழ்நிலைக்கிடையே பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|