|
| எரி சக்தி தேவைக்கு அணுசக்தி அவசியம் : மன்மோகன் |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008 ( 17:19 IST ) | |
நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய அணுசக்தி அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:
நாட்டின் எரிசக்தி தேவைக்கு ஓரிரு வளங்களை மட்டுமே நம்பி இருக்காமல , அதற்கு மாற்றாக வேறு வளங்களை மேம்படுத்த வேண்டியது அவசியம். மின்சாரத்திற்கு அதிக தேவை உள்ளது. அதற்கு அணுசக்தியை போன்று வேறு சக்தியை பயன்படுத்தவேண்டியுள்ளது.
சில வளங்களுக்கான ஆதாரம் தற்போது மிகவும் குறைந்து வருவதால், நாட்டின் எதிர்கால தேவை குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டியுள்ளது. எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்ளாவிட்டால் அரசு தனது கடமையை செய்ய தவறியதாகிவிடும்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8-9 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து வருகிறது. அதேபோல் நகர வளர்ச்சி, அதிகரிக்கும் ஆடம்பரம் ஆகியவற்றுக்கு போதுமான மின்சாரத்தை விநியோகிக்க முடியாத அளவுக்கு அதற்கான வளம் உள்ளது.
நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய அணுசக்தி அவசியம் என்பதால், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இந்த அரசு உள்ளது .
இவ்வாறு அவர் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|