யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஷிவானி கொலை வழக்கு:ஷர்மாவுக்கு ஆயுள்
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008   ( 14:52 IST )
பெண் பத்திரிகையாளர் ஷிவானி பட்நகர் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ர்மா உள்ளிட்ட நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றிய ஷிவானி, கடந்த 1999-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, ஷிவானியுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஷர்மா, கடந்த 2002-ல் அம்பாலா நீதிமன்றத்தில் சரணடைந்து, பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கடந்த 18 ம் தேதியன்று தீர்ப்பு வழங்கிய கூடுதல் செசன்ஸ் நீதிபதி ராஜேந்திர குமார் சாஸ்திரி, ஆர்.கே.ஷர்மா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சத்ய பிரகாஷ், பிரதீப் ஷர்மா மற்றும் ஸ்ரீ பகவான் ஆகியோர் குற்றப்பிரிவு 302 (கொலை) மற்றும் 102 (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகள் என்று அறிவித்தார்.

அதேநேரத்தில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஜெய் பிரகாஷ் ஷர்மா மற்றும் கலு ஆகிய இருவரும் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை தீர்ப்பை வழங்கிய நீதிபதி, ஷர்மா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்குவதாக அறிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆறாவது சம்பள கமிஷன் அறிக்கை அரசிடம் தாக்கல்
ஆறாவது சம்பள கமிஷன் அறிக்கை இன்று அரசிடம் தாக்கல்
மும்பையில் வட இந்தியர்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல்
அணுசக்தி: பிரணாப் - புஷ் இன்று சந்திப்பு
மாற்று அணி அமைக்க சரியான தருணம்: இந்திய கம்யூ.
ராஜ் தாக்கரே குற்றச்சாட்டுக்கு அமிதாப் பதில்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...