|
| ஆறாவது சம்பள கமிஷன் அறிக்கை அரசிடம் தாக்கல் |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008 ( 13:36 IST ) | |
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஆறாவது சம்பள கமிஷன் , இன்று தனது அறிக்கையை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் தாக்கல் செய்தது.
நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான இக்கமிஷன் மத்திய அரசு ஊழியர்கள் , பாதுகாப்பு துறை ஊழியர்கள் மற்றும் துணை ராணுவப் படை பணியாளர்கள் ஆகியோருக்கு 40 சதவீதம் ஊதிய உயர்வும் , வீட்டு வாடகை படி மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கு 52 சதவீத உயர்வும் அளிக்குமாறு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.
விரைவில் பொதுத் தேர்தல் வரலாம் எனக் கூறப்படுவதால் இக்கமிஷன் தெரிவித்துள்ள பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அவ்வாறு ஏற்றுக் கொண்டால், சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய பரிசாக அமையும்.
மேலும் இந்த பரிந்துரைகள் 2006 ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
ஆறாவது சம்பளக் கமிஷன் கடந்த 2006 ம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|