யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சோனியாவுக்கு அத்வானி நேரில் ஹோலி வாழ்த்து
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2008   ( 13:22 IST )
எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஹோலி பண்டிகை வட இந்தியா முழுவதும் நேற்று மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இல்லத்தில் கட்சியினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், , பா.ஜனதா தலைவரும் , எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானி நேற்று தனது மனைவியுடன் , டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் ஜன்பத் இல்லத்திற்கு திடீரென்று சென்றார்.அத்வானியைப் பார்த்த காங்கிரஸ் கட்சியினர் ஆச்சரியமடைந்தனர்.

இருப்பினும் அவரை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு சோனியாவுக்கு அத்வானி மற்றும் அவரது மனைவி ஹோலி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.சோனியாவும் பதிலுக்கு அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பின்னர் சோனியாவுக்கு தான் எழுதிய மை கன்ட்ரி, மை லைப் நூலின் பிரதி ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கினார் அத்வானி.20 நிமிடங்கள் சோனியா வீட்டில் அத்வானி இருந்தார்.

சோனியா காந்தியை அவரது இல்லத்திற்குச் சென்று அத்வானி சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

சோனியா காந்தியைத் தேடி கடந்த முறை பிரதமர் பதவி வந்தபோது அதை கடுமையாக எதிர்த்தவர் அத்வானி.
சோனியாவின் தீவிர எதிர்ப்பாளராக விளங்கும் அத்வானி, சோனியாவை அவரது வீட்டுக்குப் போய் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மன்மோகன் கொண்டாடும் 'அமைதி' ஹோலி
ஹோலி பண்டிகை இன்று கொண்டாட்டம்
ஐஏஇஏ உடனான ஒப்பந்தம் தயார் : பிரணாப் முகர்ஜி
ஜம்மு : ஒற்றுமையை வெளிப்படுத்திய விழா கொண்டாட்டங்கள்
தலாய் லாமா-பெலோசி சந்திப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. எதிர்ப்பு
தலாய் லாமாவுடன் பெலோசி சந்திப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
வெ‌ள்‌ளி‌த்‌திரை
திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்...
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
தூண்டில்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...