|
| நந்திகிராம் கலவரம் குறித்து கருத்து : அமெரிக்காவுக்கு கண்டனம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2008 ( 17:20 IST ) | |
நந்திகிராம் கலவரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்திருப்பது இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஆகும் என பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமைகள் குறித்த அமெரிக்க அரசின் வருடாந்திர அறிக்கையில், மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் நிகழ்ந்த கலவரத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவையில் இன்று இப்பிரச்சனையை எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா , அமெரிக்கா இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
நந்திகிராம் பிரச்சனையில் பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளிடையே பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம்.ஆனால் இந்தியாவுக்குள் நடக்கும் எந்த ஒரு சம்பவமும் இந்திய மக்கள் சம்பந்தப்பட்டதாகும்.இதில் அமெரிக்கா தலையிட ஒன்றுமில்லை.நந்திகிராம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்தது இந்த அவையின் ஒட்டுமொத்த தண்டனைக்குரியதாகும் என அவர் மேலும் கூறினார்.
அவரது இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி , அமெரிக்காவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு அதனை அலட்சியப்படுத்திவிடலாம் என்றும் , நாம் புஷ் நிர்வாகத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்றும் கூறி அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|