|
| டெல்லி : 10 வயது சிறுவன் எரித்துக் கொலை |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2008 ( 12:06 IST ) | |
டெல்லியிலுள்ள அலிபூர் கிராமத்தில் குடிபோதையில் இருந்த ஐந்து நபர்களால், 10 வயது சிறுவன் ஒருவன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டான்.
சஞ்சீவ் என்ற அச்சிறுவனின் உடல் கருகிய நிலையில் அலிபூரிலுள்ள வயல் பகுதியில் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மீரட்டிலிருந்து அலிபூர் கிராமத்துக்கு திருமண கோஷ்டி ஒன்று காரில் வந்துள்ளது. அந்தக் கார் மோதியதில் சிறுவன் சஞ்சீவின் சைக்கிள் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து அச்சிறுவன், 'நஷ்டஈடு தரவேண்டும்' என்று கேட்டு அந்தக் கோஷ்டியினரை வழிமறித்தான்.
இதனால் கோபமடைந்த திருமண கோஷ்டியினரில், குடிபோதையில் இருந்த ஐந்து பேர் காரிலிருந்து இறங்கிவந்து சிறுவனை அடித்துள்ளனர். அத்துடன், அச்சிறுவனை உயிருடன் எரித்து, அருகிலிருந்த வயல் வெளியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்று அலிபூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், இந்தக் கொலைக்கான காரணம் தொடர்பான தெளிவான விவரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும், இதுதொடர்பாக திருமண கோஷ்டியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சிறுவன் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், புதுடெல்லியை ஒட்டியுள்ள கிராமமான அலிபூரில் பதற்றம் நிலவி வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|