|
| விமான நிலைய ஊழியர்கள் போராட்டம் வாபஸ் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2008 ( 10:06 IST ) | |
மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இரு நாட்களாக நடத்தப்பட்டு வந்த விமான நிலைய ஊழியர்களின் காலவரையற்ற ஒத்துழையாமை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், நேற்றிரவு முதல் விமான நிலையப் பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பின.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரஃபுல் படேல், விமான நிலைய ஊழியர் சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் எம்.கே.கோஷ் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது, ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படாமல், எந்தவொரு விமான நிலையமும் மூடப்படாது என்று அமைச்சர் உறுதியளித்தார்.
இதையடுத்து, விமான நிலைய ஊழியர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்வதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முன்னதாக, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் தற்போது இயங்கிவரும் விமான நிலையங்களைத் தொடர்ந்து செயல்படச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விமான நிலைய ஊழியர்கள் கூட்டமைப்பு இந்தப் போராட்டத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|