|
| பாரதரத்னா விருது கொடுத்தால் ஏற்கமாட்டேன்: பால் தாக்கரே |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜனவரி 2008 ( 19:45 IST ) | |
நாட்டின் உயரிய விருதான 'பாரதரத்னா' விருதை தனக்கு கொடுத்தால், அதனை ஒரு போதும் ஏற்கமாட்டேன் என்று சிவசேனாக் கட்சித்தலைவர் பால்தாக்கரே கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அத்வானியைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிபாசுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியும், உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சருமான மாயாவதி அக்கட்சியின் நிறுவனர் கன்சிராமுக்கும் அவ்விருதை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து இன்று தமது கட்சி அலுவலகத்தில் செய்தியளார்களுக்கு அளித்த பேட்டியில் பால்தாக்கரே கூறுகையில், அரசியல் கட்சிகள் இவ்வாறு போட்டி போட்டுக்கொண்டு தங்களது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுவது அந்த விருதுக்கு உரிய மரியாதையை குலைக்கிறது என்றார்.
அவர்கள் இப்படி நடந்து கொள்வது தரம் தாழ்ந்த செயலாகும்.பாரத ரத்னா விருதை பெறுவதற்காக சிலர் ஏன் ஆர்வமாக உள்ளனர் என்று புரியவில்லை.
இந்த விருதுக்காக எனது பெயர் சிபாரிசு செய்யப்பட்டு எனக்கு வழங்க நேரிட்டால் நான் ஒரு போதும் ஏற்கமாட்டேன் என்று பால்தாக்கரே மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | புலி வருது | | மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|