|
| கங்குலி ரசிகர்களின் போராட்டத்தால் ரயில் போக்குவரத்து பாதிப்பு |
| கோல்கத்தா(ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜனவரி 2008 ( 17:14 IST ) | |
முத்தரப்பு ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ள இநதிய கிரிகெட் அணியில் கங்குலி சேர்க்கப்படாததை கண்டித்து அவரது ரசிகர்கள் தண்டவாளத்தில் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் கிழக்கு ரயில்வேயின் இரண்டு பிரிவுகளில் இன்று ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிழக்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பர்ஸாத் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் கங்குலி ரசிகர்கள் இன்று , தண்டவாளத்தில் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கங்குலியை ஒருநாள் போட்டி அணியில் சேர்க்க வலியுறுத்தி கோஷமிட்ட அவர்கள், கங்குலி நீக்கப்பட்டதில் சதித் திட்டம் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இவர்களது இந்த போராட்டம் காரணமாக பர்ஸாத் - பாங்கான் இடையேயும், பர்ஸாத் - ஹஸனாபாத் இடையேயும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கிழக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | புலி வருது | | மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|