|
| பில்கிஸ் கற்பழிப்பு வழக்கில் 11 பேருக்கு ஆயுள் |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜனவரி 2008 ( 16:32 IST ) | |
குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் குற்றவாளிகள் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதியன்று நிகழ்ந்த கோத்ரா ரயில் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது.
அப்போது, அகமதாபாத்திலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ரந்திக்பூர் என்ற நகரில், 6 மாத கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானுவை, ஒரு கலவர கும்பல் கற்பழித்தது. அத்துடன், அப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரையும் அக்கும்பல் கொன்று குவித்தது.
இதுதொடர்பான வழக்கு, கடந்த 2004-ல் குஜாரத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டு, கடந்த 2005 ஜனவரியில் இருந்து விசாரணை நடந்து வந்தது.
இதனிடையே ,இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில், குற்றவாளி ஒருவர் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டார். மேலும், இவ்வழக்கிலிருந்து ஏழு பேரை விடுவிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் இன்று மீதமுள்ள குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் போலீஸ் அதிகாரி ஆவார்.அவர் ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்ட நிலையில், அவர் சிறையில் இருந்த காலம் ஆயுள் தண்டனையிலிருந்து கழித்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே இன்று வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | புலி வருது | | மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|