யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பில்கிஸ் கற்பழிப்பு வழக்கு: 12 பேருக்கு இன்று தண்டனை அறிவிப்பு
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜனவரி 2008   ( 11:56 IST )
குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் குற்றவாளிகள் 12 பேருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படுகிறது.

இதன்படி, காவல்துறை அதிகாரி ஒருவர் உள்பட 12 பேருக்கான தண்டனை குறித்த விவரங்களை, இந்த வழக்கை விசாரிக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றம் வெளியிடவுள்ளது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில், குற்றவாளி ஒருவர் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டார். மேலும், இவ்வழக்கிலிருந்து ஏழு பேரை விடுவிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதியன்று நிகழ்ந்த கோத்ரா ரயில் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது.

அப்போது, அகமதாபாத்திலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ரந்திக்பூர் என்ற நகரில், 6 மாத கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானுவை, ஒரு கலவர கும்பல் கற்பழித்தது. அத்துடன், அப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரையும் அக்கும்பல் கொன்று குவித்தது.

இதுதொடர்பான வழக்கு, கடந்த 2004-ல் குஜாரத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டு, கடந்த 2005 ஜனவரியில் இருந்து விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அமெரிக்காவில் ஜார்கண்ட் மாணவர் சுட்டுக்கொலை
நாசிக் பேருந்து விபத்தில் 36 பக்தர்கள் பலி
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்த இடம்:பிரவுன் ஆதரவு
பிரிட்டிஷ் பிரதமர் பிரவுன் இந்தியா வந்தார்
3 வது அணியை மா.கம்யூ. அமைக்கும் : காரத் அறிவிப்பு
கோவா அரசியல் நெருக்கடி தீர்ந்தது ; அமைச்சரவையில் மாற்றம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace