யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அமெரிக்காவில் ஜார்கண்ட் மாணவர் சுட்டுக்கொலை
ஜார்கண்ட் (ஏஜென்சி), 21 ஜனவரி 2008   ( 10:24 IST )
அமெரிக்காவில் பொறியியல் கல்லூரி ஒன்றில் ஆராய்ச்சிக் கல்வி பயின்று வந்த ஜார்கண்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தோடு, கடந்த ஐந்து வாரங்களில் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு கரோலினாவில் உள்ள ட்யூக்ஸ் பிராட் ஸ்கூல் ஆஃப் என்ஜினியரிங் கல்லூரியில் பயின்று வந்த ஜார்கண்டைச் சேர்ந்த அபிஜீத் மகோதா (வயது 29) என்ற மாணவர் சுட்டுக் கொல்லப்பட்டது, அவரது நண்பர்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவலை, அபிஜீத்தின் குடும்பத்தினர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் டர்ஹாமிலுள்ள குடியிருப்பு கட்டட அறை ஒன்றில் அபிஜீத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் மற்றும், கொலையாளி குறித்த விவரங்கள் கிடைத்திராத நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த டிசம்பர் 13-ல் தேதியன்று லூசியானா பல்கலைக்கழக வளாகத்தில் ஆந்திர மாணவர்கள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பில்கிஸ் கற்பழிப்பு வழக்கு: 12 பேருக்கு இன்று தண்டனை அறிவிப்பு
நாசிக் பேருந்து விபத்தில் 36 பக்தர்கள் பலி
ஐ.நா.கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்த இடம்:பிரவுன் ஆதரவு
பிரிட்டிஷ் பிரதமர் பிரவுன் இந்தியா வந்தார்
3 வது அணியை மா.கம்யூ. அமைக்கும் : காரத் அறிவிப்பு
கோவா அரசியல் நெருக்கடி தீர்ந்தது ; அமைச்சரவையில் மாற்றம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace