|
| நாசிக் பேருந்து விபத்தில் 38 பக்தர்கள் பலி |
| நாசிக் (ஏஜென்சி), 21 ஜனவரி 2008 ( 08:50 IST ) | |
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாசிக் பகுதியில் பக்தர்களை ஏற்றிவந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 12 பெண்கள், 4 சிறுவர்கள் உள்பட 38 பேர் பலியாயினர்.
சப்தசிரிங்கி புனித தலத்தில் இருந்து மும்பைக்குத் திரும்பிக் கொண்டிருந்த தனியார் பேருந்து, நாசிக் அருகே நந்துரி பகுதியில் வந்துகொண்டிருந்தது. அதன் ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை இழந்ததில் நேற்றிரவு 10.30 மணியளவில், அந்தப் பேருந்து 600 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததாக நாசிக் எஸ்.பி. நிகில் குப்தா தெரிவித்தார்.
மேலும், இவ்விபத்தில் 40 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவித்த காவல்துறையினர், இந்தப் பேருந்தில் பயணம் செய்த 76 பேரும், மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர்.
இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசாரும், மீட்புப் படையினரும் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்ட நிலையில், இதில் காயமடைந்தவர்கள் நாசிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | புலி வருது | | மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|