யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஐ.நா.கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்த இடம்:பிரவுன் ஆதரவு
புதுடெல்லி (ஏஜென்சி), 21 ஜனவரி 2008   ( 08:04 IST )
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடமளிக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் வலியுறுத்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்த அவர், டெல்லி ஐஐடியில் நடந்த பிரிட்டன் - இந்திய தொழில்துறை சார்ந்த மாநாட்டில் பேசினார்.

அதில், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் குறித்து பேசிய அவர், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைப்பில் இநதியா நிரந்தர இடம் வகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், வளர்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-8 அமைப்பிலும் இந்தியா சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரவுன் வலியுறுத்தினார்.

முன்னதாக டெல்லியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது, பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சனைகளில் இந்தியா - பிரிட்டன் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு ஏற்பட வேண்டும் என்று தாம் விரும்புவதாகத் தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு டெல்லி பல்கலைக்கழகம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. மேலும், இந்தியா - பிரிட்டன் நாட்டு தலைவர்களுக்கு இடையேயான 4-வது வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் அவர் தலைமை வகிக்கிறார்.

இக்கூட்டத்தில், பருவநிலை மாற்றம், தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும், உயர்கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அத்துடன், அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மார் போன்ற நாடுகளில் நிலவி வரும் சூழல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் தொழிற்துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.

மேலும், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, எதிர்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களை, பிரவுன் சந்தித்துப் பேசவுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பில்கிஸ் கற்பழிப்பு வழக்கு: 12 பேருக்கு இன்று தண்டனை அறிவிப்பு
அமெரிக்காவில் ஜார்கண்ட் மாணவர் சுட்டுக்கொலை
நாசிக் பேருந்து விபத்தில் 36 பக்தர்கள் பலி
பிரிட்டிஷ் பிரதமர் பிரவுன் இந்தியா வந்தார்
3 வது அணியை மா.கம்யூ. அமைக்கும் : காரத் அறிவிப்பு
கோவா அரசியல் நெருக்கடி தீர்ந்தது ; அமைச்சரவையில் மாற்றம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace