|
| 3 வது அணியை மா.கம்யூ. அமைக்கும் : காரத் அறிவிப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2008 ( 17:09 IST ) | |
மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அல்லாத மூன்றாவது அணியை தாங்களே அமைக்கப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய இரு பெரும் கட்சிகள் பின்பற்றும் கொள்கைகள் தங்களுக்கு உடன்பாடானதாக இல்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.
மத்தியில் மூன்றாவது மாற்று அணியை அமைப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கும் பொறுப்பு இடதுசாரிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளது.
மத்தியில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி அல்லது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்ற சூழ்நிலை நீடிப்பதை நாங்கள் விரும்பவில்லை.
பா.ஜனதாவை தனிமைப்படுத்தி, அதனை தோற்கடிக்கும் யுக்திகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கடைபிடிக்கும்.அதே சமயம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியோ அல்லது அணி அமைக்கவோ நாங்கள் முயற்சிக்க மாட்டோம்.
காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்னவெனில், காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற கட்சி என்பதுதான் என காரத் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | புலி வருது | | மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு... |
| |
|
|
|
|
|
|
|