யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கோவா அரசியல் நெருக்கடி தீர்ந்தது ; அமைச்சரவையில் மாற்றம்
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜனவரி 2008   ( 21:54 IST )
கோவா அரசியலில் கடந்த நான்கு நாட்களாக நீடித்து வந்த நெருக்கடி இன்று தீர்ந்தது. திகம்பர் காமத் தொடர்ந்து முதலமைசராக நீடிப்பார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்து.

இன்னும் ஓரிரு நாட்களில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்து, முக்கிய இலாகாக்களை மாற்றியமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

கோவா அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்ததாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் படேல், அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்குமா எனக் கேட்டபோது, அதுகுறித்து நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ஆனால் பிரச்சனைக்கு தீர்வு காணும் முறையை முதலமைச்சர் காமத் நாளை கோவா திரும்பியதும் அறிவிப்பார் என அவர் தெரிவித்தார்.

அனைத்து தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்ஜிபி எம்எல்ஏக்கள் மற்றும் ச்யேச்சை எம்எல்ஏ விஸ்வஜித் ரானே, கோவா பாதுகாப்பு முன்னணி உறுப்பினர்கள் திகம்பர் அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் படேல் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக சிறப்பு பொருளாதார மண்டலம் தொடர்பான விவகாரத்தால் அதிருப்தியடைந்த தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் மூவரும், சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் தாங்கள் திகம்பர் காமத் தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மூவரும் புதிய அரசு அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, முதல்வர் காமத் நேற்றிரவு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த எம்.எல்.ஏ.க்களுடன், காங்கிரஸ் தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

கோவாவில் மொத்தமுள்ள 40 உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சியிடம் 16 உறுப்பினர்களும், பாரதிய ஜனதா கட்சியிடம் 14 உறுப்பினர்களும், தேசிய வாத காங்கிரஸிடம் 3 உறுப்பினர்களும், கோவா முன்னணி மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் தலா இருவரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பறவைக் காய்ச்சல் :மே.வங்க அரசு மீது மத்திய அரசு அதிருப்தி
என்டிடிவி அலுவலகம் மீது தாக்குதல் : காங். கண்டனம்
ஜம்மு - ஸ்ரீநகர் சாலை போக்குவரத்து தொடர்ந்து பாதிப்பு
என்டிடிவி அலுவலகம் மீது தாக்குதல் : இருவர் காயம்
கோவா பிரச்சனையைத் தீர்க்கும் முனைப்பில் காங்.
பறவைக் காய்ச்சல்: உ.பி.யில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ஓம் ஷாந்தி ஓம்' மூலமாக இந்தித் திரைப்பட ரசிகர்களை மட்டுமின்றி, இந்தியா முழுவதும் வசீகரித்திருப்பவர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
புலி வருது
மூட நம்பிக்கைகள் கூடாது என்ற கருத்தை காமெடி கலந்து சொல்ல வந்திருக்கும் படம் இது. ஆனால் அதை...
மிருகம்
பில்லா
ஆரோக்கியம்
தகவல்கள் - ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் விருப்பம். அவ்வாறு வாழ வேண்டுமானால் நான்கு...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace