யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு:வளர்ந்த நாடுகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்
விசாகப்பட்டினம் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 3 ஜனவரி 2008   ( 15:31 IST )
தட்ப வெப்ப நிலையின் மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதில் தொழில் துறையில் வளர்ந்த நாடுகளுக்கும் அதிக அளவிலான பொறுப்பு உள்ளது என்று கூறியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு அத்தகைய நாடுகள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

விசாகப்பட்டினத்தில் இன்று 95-வது இந்திய அறிவியல் மாநாட்டைத் துவக்கி வைத்த அவர், சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.

அப்போது, உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை சீர் செய்ய வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு, தொழில் ரீதியாக வளர்ந்த நாடுகளுக்கு உண்டு என்று குறிப்பிட்ட பிரதமர், 'தட்ப வெப்ப நிலை மாற்றம், அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் புதியதும், மிகப் பெரியதுமான சவாலாகத் திகழ்கிறது' என்று தெரிவித்தார்.

மேலும், 'நாம் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்' என்று கூறிய அவர், இதற்கு அறிவியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து பேசிய விஞ்ஞானி ஆர்.சிதம்பரம், இந்தப் பிரச்சனையில் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவில் அனைத்துத் தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச மற்றும் தேசிய அளவில் அறிவியல் துறையைச் சேர்ந்த 8,000 பேர் பங்கேற்கும் இந்த மாநாடு, ஐந்து நாட்களுக்கு நடைபெறுகிறது.

இதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வாயிலாக சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்படுகின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை வணிக வளாகத்தில் தீ விபத்து
விஜயவாடா கோயில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் 5 பேர் பலி
ஈவ்-டீசிங் : லாலு மகன்களுக்கு அடி - உதை
நாகாலாந்தில் ஜனாதிபதி ஆட்சி: மத்திய அரசு பரிந்துரை
2007ல் 53,444 எஸ்சி, எஸ்டியினருக்கு பணி
பாக்.‌கி‌ல் அமை‌‌தி: ஏ.கே.அ‌ந்தோ‌ணி விருப்பம்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
மிருகம்
மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை! இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்...
பில்லா
எவனோ ஒருவன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace