|
| விஜயவாடா கோயில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் 5 பேர் பலி
|
| விஜயவாடா (ஏஜென்சி), 3 ஜனவரி 2008 ( 11:02 IST ) | |
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் உள்ள கோயில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 5 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர். விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோயிலில் இன்று காலை பவானி தீட்சிதை விழா கொண்டாடப்பட்டபோது, அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அப்போது, ஏற்பட்ட நெரிசலில் 5 பெண்களும், குழந்தையும் பலியானதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ௦
இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தவறிய கோயில் நிர்வாகம் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு, மாநில அறநிலையத் துறை அமைச்சர் ஜே.ரத்னாகர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது...
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|