|
| ஈவ்-டீசிங் : லாலு மகன்களுக்கு அடி - உதை |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 3 ஜனவரி 2008 ( 10:26 IST ) | |
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகன்களுக்கு, இளம் பெண்களை `ஈவ்-டீசிங்' செய்ததால் அடி - உதை கிடைத்தது.
ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் மகன்களான தருண், தேஜ்பால் ஆகிய இரண்டு பேரும் புத்தாண்டு கொண்டாட முடிவு செய்து ஒரு ஓட்டலுக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த இளம் பெண்களை அவர்கள் `ஈவ்-டீசிங்' செய்தனர்.
புத்தாண்டு நள்ளிரவில் ஒவ்வொரு இடமாக சென்று விட்டு திரும்பும் வழியில், மெரூலி என்ற இடத்தில் ஒரு பண்ணை வீட்டில் புத்தாண்டு விருந்து நடைபெற்றதை பார்த்து அங்கும் நுழைந்தனர்.
அங்கிருந்த இளம் பெண்களிடம் குறும்பு செய்துள்ளனர். மேலும், அவர்களை கேலி பேசியுள்ளனர். லாலு மகன்களின் கேலி பேச்சு, அந்த இளம் பெண்களின் ஆண் நண்பர்களுக்கு ஆத்திரத்தை மூட்டியது. உடனே அவர்கள் ஒன்று திரண்டு தருண், தேஜ்பால் இருவரையும் அடித்து உதைத்தனர். தடுக்க வந்த பாதுகாவலருக்கும் அடி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்கிருந்து தப்பி வந்தனர்.
பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை செய்து கொண்டனர். அப்போது உடன் சென்ற பாதுகாவலர் தன்னுடைய கைத்துப்பாக்கி காணாமல் போயிருப்பதை பார்த்தார். உடனே, அவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று துப்பாக்கி காணாமல் போனது குறித்து புகார் செய்தனர்.
இதனையடுத்து பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர் வைத்திருந்த துப்பாக்கி காணாமல் போனதால், போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மேற்கண்ட சம்பவங்கள் தெரியவந்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|