|
| நாகாலாந்தில் ஜனாதிபதி ஆட்சி: மத்திய அரசு பரிந்துரை |
| புதுடெல்லி (ஏஜென்சி), 3 ஜனவரி 2008 ( 10:06 IST ) | |
நாகாலாந்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அல்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் நெய்பியூரியோ தலைமையிலான நாகாலாந்து ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 60 உறுப்பினர்களைக் கொண்ட அம்மாநில சட்டசபையில் கடந்த மாதம் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் 23-க்கு 19 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து, நாகாலாந்து மாநில காங்கிரஸ் தலைமையில் 31 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து, பெரும்பான்மையை இழந்து விட்ட நெய்பியூரியோ அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாகாலாந்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|