|
| 2007ல் 53,444 எஸ்சி, எஸ்டியினருக்கு பணி
|
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 2 ஜனவரி 2008 ( 22:49 IST ) | |
கடந்த ஆண்டில் மட்டும் 53 ஆயிரத்து 444 காலி பணியிடங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அமர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் முதியோர் ஓய்வூதிய அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, சுமார் 74,008 காலி இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், நேரடி நியமன ஒதுக்கீட்டில் 26,358 பணியிடங்களும், பதவி உயர்வு மூலம் 47,650 பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டும்.
மத்திய அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியின் பயனாக 53,444 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. அதன்படி, நேரடி நியமனம் மூலம் 20,466 பணியிடங்களும், பதவி உயர்வு மூலம் 32,998 பணியிடங்களும் நிரப்பட்டுள்ளன.
பதவி உயர்வு முறையில் நிரப்பப்பட வேண்டிய 13,164 பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|