|
| குஜராத் புதிய அமைச்சர்கள் 4 ம் தேதி பதவியேற்பு |
| அகமதாபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 2 ஜனவரி 2008 ( 15:59 IST ) | |
குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்கள் வருகிற 4 ம் தேதி பதவியேற்க உள்ளனர்.
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 25 ம் தேதியன்று பதவியேற்றுக் கொண்டார்.
அவருடன் அன்றைய தினம் அமைச்சர்களாக யாரும் பதவியேற்கவில்லை.இந்நிலையில், புதிய அமைச்சரவையில் யார்யாருக்கு இடமளிப்பது என்பது குறித்து கடந்த பல நாட்களாக மோடி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.
அத்துடன் டெல்லி சென்றிருந்த மோடி, அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களுடனும் அமைச்சரவையில் யார்யாருக்கு இடமளிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இந்த ஆலோசனை இறுதி வடிவம் பெற்றதைத் தொடர்ந்து முதல்கட்டமாக 12 அமைச்சர்களை தனது அமைச்சரவையில் சேர்க்க மோடி முடிவு செய்துள்ளதாகவும், இவர்கள் வருகிற 4 ம் தேதி பதவியேற்க உள்ளதாகவும் பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும், முதல்கட்டமாக 12 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அநேகமாக மோடி அமைச்சரவையில் புதிய முகங்களுக்கு கணிசமாக வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|