|
| டேங்கர் லாரி ஸ்டிரைக்: காஸ் தட்டுப்பாடு அபாயம் |
| மங்களூரு (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2007 ( 14:53 IST ) | |
டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணாமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கர்நாடகாவிலுள்ள மங்களூரு எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றி செல்லும் லாரிகள் ஹாசன் பகுதி வழியாக பிற மாநிலங்களுக்கு செல்கின்றன.
சமீபத்தில் பெய்த மழையால் கர்நாடக சாலைகள் சேதமடைந்தன. இதனால் டேங்கர் லாரிகள் அனைத்தும் ஹுப்ளி வழியாக மட்டுமே தற்போது சென்று வருகின்றன. இதனால் 400 கிமீ தொலைவு அதிகமாவதால் பெட்ரோல் செலவும் அதிகரிக்கிறது.
இதனால், கூடுதல் கட்டணம் தரும்படி டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து விட்டன.
இதையடுத்து, கூடுதல் கட்டணம் கோரி நேற்று நள்ளிரவு முதல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|