|
| சேலம் கோட்டத்தை எதிர்க்கவில்லை: அச்சுதானந்தன் |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 9 செப்டம்பர் 2007 ( 13:52 IST ) | |
'சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பதை அமைப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் கேரளாவை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே மண்டலம் அமைக்க வேண்டும்' என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன், ரயில்வே அமைச்சர் லாலுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்க கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதுதொடர்பாக இருமாநில முதல்வர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தும்படி ரயில்வே அமைச்சர் லாலுவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, சேலம் ரயில்வே கோட்டம் துவக்கவிழா வரும் 14ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேற்று டெல்லி வந்தார். ரயில்வே அமைச்சர் லாலுவை இன்று சந்தித்து பேசினார்.
அப்போது, 'சேலம் ரயில்வே கோட்டத்தை தான் எதிக்கவில்லை என்றும், ஆனால் மாநில வளர்ச்சிக்காக கேரளாவை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே மண்டலம் அமைக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து பரிசீலிப்பதாக லாலு உறுதியளித்துள்ளார்.
இதைதொடர்ந்து இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கையும் அச்சுதானந்தன் சந்தித்து பேசவுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|