|
| அலட்சியம் வேண்டாம் :அரசுக்கு பரதன் எச்சரிக்கை |
| விசாகப்பட்டணம்(ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007 ( 18:02 IST ) | |
இடதுசாரிகள் தெரிவிக்கும் ஆட்சேபணைகளை ஐமுகூ அரசு அலட்சியப்படுத்துமானால், அதற்கான பின் விளைவுகள் தொடரும் என ஏ.பி.பரதன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து, இந்தியா கூட்டு கடற் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசாகப்பட்டணத்தில், இடதுசாரிகள் சார்பில் நடத்தப்படும் பேரணியில் கலந்து கொள்ள வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் தெரிவிக்கும் கவலைகளையும், ஆட்சேபணைகளையும் மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அலட்சியப்படுத்துமானால், அதற்கான பின்விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
இடதுசாரிகள் தெரிவிக்கும் கவலைகளையும், ஆட்சேபணைகளையும் ஐமுகூ அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு , அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
எங்களது ஆட்சேபணைகள் விவாதிக்கப்படவேண்டியதுதான் என்பதை அரசு உணருமாறு செய்ததில் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.எங்களது ஆட்சேபணைகள் குறித்து பரிசீலிப்பதற்காகத்தான் ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
ஐமுகூ அரசுக்கு அளித்துவரும் ஆதரவு எவ்வளவு காலத்திற்கு தொடரும் என கேட்கப்படுகிறது.நாங்களும் அதுபற்றி யோசிப்போம்.
அதேபோன்று பாராளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் வருமா அல்லது வராதா என்பது, மத்தியில் அரசை வழி நடத்தி செல்லும் கட்சியின் ( காங்கிரஸ் ) கையில்தான் உள்ளது என பரதன் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|