|
| மணிப்பூரில் வெள்ளப்பெருக்கு ; மீட்புப் பணிகள் தீவிரம் |
| இம்பால் (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007 ( 15:06 IST ) | |
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் பலத்த மழையால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அம்மாநிலத்திலுள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, அவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் மழையின் காரணமாக, விவசாய நிலங்கள் பல ஏக்கர் கணக்கில் மூழ்கியுள்ளதாகவும், வேளாண் உற்பத்தி பொருட்கள் வெகுவாக பாழடைந்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் 400-க்கும் மேற்பட்ட வீடுகள், வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இம்மாநிலத்தில் சாலைகள், மின்சாரம், போக்குவரத்து ஆகியவை வெகுவாக பாதிப்படைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|