|
| பெண் கல்விக்கு மேலும் முக்கியத்துவம் : பிரதிபா வலியுறுத்தல் |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007 ( 15:04 IST ) | |
பெண் கல்விக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வலியுறுத்தினார்.
சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள விக்யன் பவனில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தலைமையேற்றுப் பேசினார்.
அப்போது, எழுத்தறிவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி காணப்படுவது மிகுந்த வருத்தத்துக்குரியது என்றும், இந்நிலை மாறுவதற்கு பெண் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நாட்டில் எழுத்தறிவு இல்லாதோரின் எண்ணிக்கை, உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகரித்து காணப்படுவது கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், உலக அளவில் எழுத்தறிவு பெறாதவர்களில், பெரியவர்கள் 35 சதவிகிதத்தினரும், குழந்தைகளில் 20 சதவிகிதத்தினரும் இந்தியாவில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|