யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ராஜஸ்தான் லாரி விபத்து : பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு
உதய்பூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007   ( 13:13 IST )
ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சாமுந்த் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது. மேலும், 62 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து உதய்பூர் காவல்துறை ஐ.ஜி. ராஜிவ் தசோத் இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இவ்விபத்தில் பலியான 75 பேரின் சடலங்கள் நள்ளிரவில் மீட்கப்பட்டது. இதில் காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்" என்றார்.

அதேநேரத்தில், இவ்விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 100-ஐ தொட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்மாநிலத்தின் ஜெய்சல்மா மாவட்டத்திலுள்ள ராம் தேவ்ரா கோயிலுக்கு, சுமார் 200 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி, ராஜ்சாமுந்த் மாவட்டத்திலுள்ள தேசூரி கி நால் என்ற கிராமத்தின் மலைப்பாதையை நேற்றிரவு 8 மணியளவில் நெருங்கியது.

அப்போது, கட்டுப்பாட்டை முழுவதுமாய் இழந்த அந்த லாரி, தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 80 அடி அளவிலான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தில், இவ்விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், காயமடைந்தோரில் பலரது நிலை, கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இவ்விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'எய்ம்ஸ்சில் சுகாதாரத்துறை அமைச்சர் தலையீடு இல்லை'
ராஜஸ்தான் : பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து 75 பக்தர்கள் பலி
பெட்ரோல், டீசல் விலை விரைவில் உயரும்?
'அமெரிக்காவின் ராணுவ கூட்டாளியாகிவிடக்கூடாது இந்தியா'
தொழிலதிபர் அலிஸ்டருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு
அணுசக்தி ஒப்பந்தத்தால் அமளி:பார்லி., ஒத்திவைப்பு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace