|
| ராஜஸ்தான் : பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து 75 பக்தர்கள் பலி |
| உதய்பூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007 ( 08:00 IST ) | |
ராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சாமுந்த் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில், லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலியாயினர்; 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அம்மாநிலத்தின் ஜெய்சல்மா மாவட்டத்திலுள்ள ராம் தேவ்ரா கோயிலுக்கு, 200 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லாரி, ராஜ்சாமுந்த் மாவட்டத்திலுள்ள தேசூரி கி நால் என்ற கிராமத்தின் மலைப்பாதையை நேற்றிரவு 8 மணியளவில் நெருங்கியபோது, இவ்விபத்து ஏற்பட்டது.
அப்போது, கட்டுப்பாட்டை முழுவதுமாய் இழந்த அந்த லாரி, தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 80 அடி அளவிலான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதில், பலியான 75 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த 120-க்கும் மேற்பட்டோரை மீட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், காயமடைந்தோரில் பலரது நிலை, கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இவ்விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|