யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தொழிலதிபர் அலிஸ்டருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு
மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2007   ( 13:27 IST )
மும்பையில் 7 பேரை காரை ஏற்றி கொன்ற ழக்கில், தொழிலதிபர் அலிஸ்டர் பெரியிராவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனுவை, உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

கடந்த 2006-ம் ஆண்டின் நவம்பர் 12-ம் தேதியில், கட்டடத் தொழிலாளர்கள் மீது அலிஸ்டர் ஓட்டிச் சென்ற கார் ஏறியதில், 7 பேர் பலியாயினர்; 8 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட், அலிஸ்டருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, இவ்வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுவதந்தர் குமார் மற்றும் நீதிபதி ரஜானா தேசாய் ஆகியோர் கொண்ட பெஞ்ச், அலிஸ்டருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து, அலிஸ்டரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தனர்.

முன்னதாக, மும்பை காவல்துறையினரிடம் சரணடைந்த அலிஸ்டர், ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணுசக்தி ஒப்பந்தத்தால் அமளி:பார்லி., ஒத்திவைப்பு
பார்லி.: இரு அவைகளும் மதியம் வரை ஒத்திவைப்பு
ஓட்டெடுப்பின்றி விவாதம்: பா.ஜ., எதிர்ப்பு
புக்கர் பரிசு : பரிந்துரைப் பட்டியலில் இந்திய எழுத்தாளர்
மும்பை குண்டுவெடிப்பு:மேமன் குடும்பத்தினருக்கு ஜாமீன்
123 ஒப்பந்தம்: பா.ஜ.,வுக்கு காரத் அழைப்பு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace