யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மும்பை குண்டுவெடிப்பு:மேமன் குடும்பத்தினருக்கு ஜாமீன்
புதுடெல்லி(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2007   ( 11:55 IST )
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மேமன் குடும்பத்தினர் மூவருக்கு, இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான டைகர் மேமனின சகோதரர் யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையும், மற்ற இரு சகோதரர்களான யூசுப் ரசாக், எஸ்ஸா மேமன் மற்றும் உறவுப் பெண்ணான ரூபினா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மும்பை தடா நீதிமன்ற நீதிபதி கோடே தீர்ப்பளித்தார்.

தற்போது, சிறையில் இருக்கும் இவர்களுக்கு தீர்ப்பின் நகல் இதுவரை வழங்கப்படவில்லை. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தனர்.

இந்த மனுவை நீதிபதி பி.பி.நவ்லோகர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

இதில் யாகூப் மேமனைத் தவிர மற்ற மூவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பின் நகல் கிடைக்கப்பெற்றவுடன் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், என்றும் நீதிபதி கேட்டுக் கொண்டார்.

இதே வழக்கில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் இடைக்கால ஜாமீனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
123 ஒப்பந்தம்: பா.ஜ.,வுக்கு காரத் அழைப்பு
ஜனார்த்தன ரெட்டியை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்
தாக்குதலில் இருந்து தப்பினார் ஆந்திரா முன்னாள் முதல்வர்
பார்லி. கூட்டுக் குழு: மத்திய அரசு நிராகரிப்பு
முல்லைப்பெரியாறு: புதிய அணை கட்ட கேரளா திட்டம்
ஹைதராபாத் குண்டுவெடிப்பு: மேலும் 10 பேர் கைது
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace