யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜனார்த்தன ரெட்டியை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல்
ஆந்திரா முன்னாள் முதல்வரும்,மக்களவை எம்.பியுமான ஜனார்த்தன ரெட்டியை குறிவைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

ஜனார்த்தன ரெட்டியும், அவரது மனைவியும் குழந்தைகள் நல அமைச்சருமான ராஜலட்சுமியும் ஒரே காரில் நெல்லூரில் இருந்து இன்று காலை திருப்பதி புறப்பட்டனர்.

இன்று காலை 6.30 மணியளவில் சித்வேடு என்ற இடத்தில் ரெட்டி காரை குறிவைத்து, மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ரிமோட் மூலம் இயங்கும் நிலக் கண்ணிவெடியை வெடிக்கச் செய்தனர்.

இதனால் இவர்களது கன்வாய் வழியே பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் ரெட்டி வந்த காருக்கு முன்னதாக சென்ற கார் ஒன்று பலத்த சேதமடைந்தது. அதில் வந்த நான்கு பேர் பலியானார்கள்.

ரெட்டி வந்த கார் குண்டு துளைக்காத கார் என்பதால் அவரது காருக்கு அதிக சேதம் எதுவும் ஏற்படவில்லை.

எனவே,இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து ரெட்டியும், அமைச்சர் ராஜலட்சுமியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஜனார்த்தன ரெட்டி, காங்கிரஸ் சார்பில் விசாகப்பட்டினம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தாக்குதலில் இருந்து தப்பினார் ஆந்திரா முன்னாள் முதல்வர்
பார்லி. கூட்டுக் குழு: மத்திய அரசு நிராகரிப்பு
முல்லைப்பெரியாறு: புதிய அணை கட்ட கேரளா திட்டம்
ஹைதராபாத் குண்டுவெடிப்பு: மேலும் 10 பேர் கைது
அணுசக்தி ஒப்பந்தம்: செப்.9ல் உயர்மட்ட குழு கூட்டம்
பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace