யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
"இந்த பொய்க்கு மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும்!"
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்டு 2007   ( 13:39 IST )
"அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கூறிய பொய்யை, சீனாவில் சொல்லியிருந்தால் மன்மோகன் மீது தோட்டா பாய்ந்திருக்கும் " எபிரதமரை கடுமையாக விமர்சித்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு எதிராக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த விவகாரத்தில், இந்திய மக்களை பிரதமர் மன்மோகன் சிங் ஏமாற்றிவிட்டார் என்றும், இதுவே சீனாவாக இருந்தால், அவர் மீது தோட்டா பாய்ந்திருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கிய சில நிமிடங்களில், ஃபெர்னாண்டஸ்சின் பேட்டிக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

'ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோர வேண்டும்' என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், அந்தப் பேட்டி இடம்பெற்றிருந்த செய்தித்தாள்களைக் காட்டிய அவர்கள், 'இது மாபெரும் அவமதிப்புச் செயல்'என்று குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து ஃபெர்னாண்டஸுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், அவையை பிற்பகல் 2.30 வரை சபாநாயகர் ஹமீத் அன்சாரி ஒத்திவைத்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்
இன்று மா.கம்யூ.,பொலிட் பீரோ கூட்டம்
அரசுக்கு ஆதரவு இல்லை : பரதன்
'இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தும் உரிமை பாதிக்கப்படாது'
மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace