|
| இன்று மா.கம்யூ.,பொலிட் பீரோ கூட்டம் |
| புதுடெல்லி(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்டு 2007 ( 09:27 IST ) | |
பரபரப்பான சூழ்நிலையில் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஆலோசிப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் பொலிட் பீரோ கூட்டம் இன்று துவங்குகிறது.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் மறுபரிசீலனைக்கே இடமில்லை, என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
இந்நிலையில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்கள் கூட்டம் இன்று டெல்லியில் துவங்குகிறது.
இரண்டு நாள் நடக்கும் இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமை வகிக்கிறார்.
இந்த விவகாரத்தில், இடது சாரிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தோற்று விட்டது என்றே கூறப்படுகிறது.
மேலும், இடதுசாரிகள் விருப்பப்பட்டால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்,என பிரதமர் மன்மோகன் கூறியிருப்பது இன்றைய கூட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கும்.
எனவே, மத்திய அரசுக்கு இடதுசாரிகள் தொடர்ந்து ஆதரவளிப்பார்களா இல்லை வாபஸ் பெறுவார்களா என்பது இந்த கூட்ட முடிவில் தெரிய வரும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தொட்டால் பூ மலரும் | | பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|