யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தும் உரிமை பாதிக்கப்படாது'
புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 16 ஆகஸ்டு 2007   ( 16:41 IST )
இந்திய - அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தத்தால், இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தும் உரிமை பாதிக்கப்படாது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.


இந்திய - அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தத்தால், இந்தியாவின் அணு குண்டு தயாரிப்பதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை,என பிரதமர் மன்மோகன் சிங் மக்களவையில் நேற்று முன்தினம் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

ஆனால்,இந்தியா எதிர்காலத்தில் அணுஆயுத சோதனை நடத்தினால் அணுஆயுத ஒப்பந்தம் ரத்தாகும், என அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மக் நேற்று தெரிவித்தார்.

இதனால் பாராளுமன்றத்திற்கு பிரதமர் தவறான தகவலை தந்துவிட்டதாக கூறி, இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் இன்று அமளியில் ஈடுபட்டன.

இந்நிலையில், மாநிலங்கவையில் இது தொடர்பான கேள்விக்கு இன்று எழுத்து மூலம் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியா - அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தத்தில், அணு ஆயுத சோதனை நடத்துவது பற்றியே குறிப்பிடப்படவில்லை என்றும், அணு சக்தியை அமைதியான பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்பது மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான அணு ஆயுத ஒப்பந்தத்தால், இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தும் உரிமை பாதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

மேலும் பிரதமர் கடந்த 17 ம் தேதியன்று அவைக்கு அளித்த அறிக்கை, அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளிடையேயான அரசியல் புரிந்துணர்வுகளையும், கடமைகளையும்தான் பிரதிபலிக்கிறது என முகர்ஜி தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ கூட்டம் இன்று துவக்கம்
அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு : இருவர் காயம்
ஹிமாச்சலபிரதேசத்தில் வெள்ளம் : ஐந்து பேரின் உடல்கள் மீட்பு
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace