|
| மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 16 ஆகஸ்டு 2007 ( 15:09 IST ) | |
இந்திய அமெரிக்க அணுசக்தி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று காலை மக்களவை கூடியதும்,கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு இந்திய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும், என வலியுறுத்தி எதிர்க்கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியும், ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியும் அமளியில் ஈடுபட்டன.
இந்த விவகாரத்தில் இடதுசாரிகள் தங்கள் நிலையை விளக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டன.
இதையடுத்து, அவையை காலை 11.30 மணிவரை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஒத்தி வைத்தார்.
இதையடுத்து, மீண்டும் அவை கூடியதும் அதே விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட அவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
உணவு இடைவேளை முடிந்து அவை மீண்டும் கூடியது.
அப்போது, இந்திய அமெரிக்க அணுஆயுத ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் இந்த அவையில் தவறான தகவல்களை தந்து விட்டார், என எதிர்க்கட்சிகள் கூட்டாக கோஷம் எழுப்பினர்.
இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
இதையடுத்து, இன்று முழுவதும் அவையை ஒத்திவைத்து சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தொட்டால் பூ மலரும் | | பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|