யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
புதுடெல்லி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 16 ஆகஸ்டு 2007   ( 13:17 IST )
அணு ஆயுத விவகாரம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பெரும் புயலைக் கிளப்பியது. இதையடுத்து, ராஜ்யசபை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவை பிற்பகல் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியா எதிர்காலத்தில் அணுகுண்டு சோதனை நடத்தினால், அணுஆயுத ஒப்பந்தம் ரத்தாகும், என அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மக் நேற்று தெரிவித்தார்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தால், இந்தியாவின் அணு குண்டு தயாரிப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை,என பிரதமர் மன்மோகன் சிங் மக்களவையில் நேற்று முன்தினம் அறிக்கை மூலம் தெரிவித்திருக்கும் நிலையில், சீன் மெக்கார்மக் கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று பாராளுமன்றம் கூடியதும், மெககார்மக்கின் பேட்டி குறித்து விவாதிக்க வேண்டும்,என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதற்கு மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, கேள்வி நேரம் முடிந்ததும் இப்பிரச்சனை குறித்து விவாதிக்கலாம் எனக் கூறினார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. சபாநாயகரின் இருக்கையை நோக்கி வந்து கோஷங்களை எழுப்பினர்.

இதனால், மதியம் 2 மணிவரை மக்களவையை ஒத்தி வைத்து சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.

இதே விவகாரம், மாநிலங்களவையிலும் புயலைக் கிளப்ப, அங்கு அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ கூட்டம் இன்று துவக்கம்
அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு : இருவர் காயம்
ஹிமாச்சலபிரதேசத்தில் வெள்ளம் : ஐந்து பேரின் உடல்கள் மீட்பு
வேளாண் வளர்ச்சி: 60வது சுதந்திர தினத்தில் பிரதமர் வலியுறுத்தல்
அனைவருக்கும் பொருளாதார முன்னேற்றத்தின் பலன் : ஜனாதிபதி
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace