யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ கூட்டம் இன்று துவக்கம்
வியாழக்கிழமை, 16 ஆகஸ்டு 2007   ( 13:35 IST )
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஆலோசிப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் பொலிட் பீரோ கூட்டம் இன்று துவங்குகிறது.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் மறுபரிசீலனைக்கே இடமில்லை, என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

இந்நிலையில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர்கள் கூட்டம் இன்று கோல்கத்தாவில் துவங்குகிறது.

இரண்டு நாள் நடக்கும் இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தலைமை வகிக்கிறார்.

இந்த விவகாரத்தில், இடது சாரிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் தோற்று விட்டது என்றே கூறப்படுகிறது.

மேலும், இடதுசாரிகள் விருப்பப்பட்டால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்,என பிரதமர் மன்மோகன் கூறியிருப்பது இன்றைய கூட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கும்.

எனவே, மத்திய அரசுக்கு இடதுசாரிகள் தொடர்ந்து ஆதரவளிப்பார்களா இல்லை வாபஸ் பெறுவார்களா என்பது நாளை(வெள்ளிக் கிழமை) தெரிந்து விடும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
அஸ்ஸாமில் குண்டு வெடிப்பு : இருவர் காயம்
ஹிமாச்சலபிரதேசத்தில் வெள்ளம் : ஐந்து பேரின் உடல்கள் மீட்பு
வேளாண் வளர்ச்சி: 60வது சுதந்திர தினத்தில் பிரதமர் வலியுறுத்தல்
அனைவருக்கும் பொருளாதார முன்னேற்றத்தின் பலன் : ஜனாதிபதி
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace