|
| ஹிமாச்சலபிரதேசத்தில் வெள்ளம் : ஐந்து பேரின் உடல்கள் மீட்பு |
| சிம்லா (ஏஜென்சி), புதன்கிழமை, 15 ஆகஸ்டு 2007 ( 15:33 IST ) | |
ஹிமாச்சலபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், ராமபூர் அருகேயுள்ள கனவி என்ற கிராமத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், 52 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
அந்தக் கிராமத்தில் உள்ள 16 வீடுகளில் வெள்ளம் புகுந்ததில் பலர் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அதில் நான்கு பெண்கள் உள்பட 5 பேரின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டதாகவும் அம்மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் வெள்ளம் புகுந்துள்ளதால், கிராம மக்களுக்கு போதிய முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டவர்களில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகள் முழு மூச்சுடன் நடைபெற்று வருகின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தொட்டால் பூ மலரும் | | பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|