யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
வேளாண் வளர்ச்சி: 60வது சுதந்திர தினத்தில் பிரதமர் வலியுறுத்தல்
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 15 ஆகஸ்டு 2007   ( 10:46 IST )
நாடு முழுவதும் 60-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி, செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மன்மோகன் சிங், வேளாண் துறையில் வளர்ச்சி அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையில் பேசியதாவது:

"நாட்டில் வறுமையை ஒழிக்க மத்திய அரசு கடமையாற்றி வருகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பாரத் நிர்மான் திட்டத்தால் கிராமப்புறங்களின் நிலை வெகுவாக மாறியுள்ளது."

வேளாண்துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி

"விவசாயிகளே நம் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. வேளாண் துறைக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.

மறுவாழ்வு மற்றும் சீரமைப்பிற்கான தேசிய கொள்கை இறுதி வடிவம் பெற்றுள்ள நிலையில், தொழில்மயமாக்களில் புத்துணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யப்படும். உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

புதிய உயர் கல்வி நிறுவனங்கள்!

அடிப்படைக் கல்வியுடன், உயர் கல்வியிலும் ஏற்றம் காண வழிவகை செய்யப்படும். புதிதாக எட்டு ஐஐடி கல்வி நிறுவனங்களும், ஏழு ஐஐஎம் நிறுவனங்களும் நிறுவப்படும்.

ஆதி திராவிட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும். ஏழை மக்களுக்கென புதிய காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும்.

அண்டை நாடுகளுடன் நல்லுறவுக்கு தொடர்ந்து வழிவகுக்கப்படும். ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும்."

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். முன்னதாக அவர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சகர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியையொட்டி டெல்லியில் பல்லாயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அனைவருக்கும் பொருளாதார முன்னேற்றத்தின் பலன் : ஜனாதிபதி
இந்திய அரசியலின் 60 ஆண்டுகால முக்கிய நிகழ்வுகள்
' மும்பை கலவரக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் '
தென் ஆப்பிரிக்கா செல்கிறார் சோனியா
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
கேரள எம்.பி.க்கள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace