யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அனைவருக்கும் பொருளாதார முன்னேற்றத்தின் பலன் : ஜனாதிபதி
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 14 ஆகஸ்டு 2007   ( 23:21 IST )
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தால் விளையும் பலன்கள் யாவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறினார்.

இந்தியாவின் 60-வது சுதந்திர தினத்தையொட்டி அவர் இன்று நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

"நாட்டின் பொருளாதார மேம்பாட்டால் உண்டாகும் பலன்கள், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். அனைத்துத் துறைகளிலும் சம அளவிலான முன்னேற்றத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். குறிப்பாக, வறுமைக் கோட்டுக்கு கீழே வசிப்போர்கள் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் பொருளாதாரத்தில் ஏற்றம் காண வேண்டும்.

சமத்துவமும் வளமும் முழுமையாக காணப்படும் வகையில், நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் கனவினை நிறைவேற்ற வேண்டும். சமூகத்தில் பொருளாதார நிலையில் தாழ்ந்து காணப்படும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும்.

நாட்டில் உயர்வு, தாழ்வு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். சமூகத்தில் அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்.

வேளாண்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அத்துறை செழிப்புடன் ஏற்றம் பெறுவதற்கான கொள்கைகளையும், தொழில்நுட்பங்களையும் அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து நாடுகளுடனும் நட்புணர்வுடன் இருக்கும் நாம், உலக அமைதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் தொடர்ந்து செயல்படுவோம்."

இவ்வாறு தனது உரையில் குறிப்பிட்ட நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், நாட்டு மக்களுக்கு தனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்திய அரசியலின் 60 ஆண்டுகால முக்கிய நிகழ்வுகள்
' மும்பை கலவரக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் '
தென் ஆப்பிரிக்கா செல்கிறார் சோனியா
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
கேரள எம்.பி.க்கள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
இந்திய அணுசக்தி ஒப்பந்தம்:மன்மோகனுக்கு சோனியா ஆதரவு
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தொட்டால் பூ மலரும்
பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய...
வீராப்பு
கிரீடம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace