|
| மன்மோகன் சிங் விவேகமானவர்: ஒபாமா புகழாரம் |
| வாஷிங்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009 ( 12:53 IST ) | |
இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாக நியமிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கிற்கு பாராட்டுத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, மன்மோகன் விவேகமானவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா ஷங்கரிடம் இதனைத் தெரிவித்த ஒபாமா, தாம் மதிக்கும் உலகத் தலைவர்களில் ஒருவராக பிரதமர் மன்மோகன் சிங் திகழ்வதாகவும், விரைவில் இந்தியா வந்து அவரைச் சந்திக்க தாம் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பதவி வகித்து வந்த ரோனன் சென் பதவிக்காலம் கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட மீரா ஷ்ங்கர் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி அமெரிக்கா சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஜெர்மனிக்கான இந்தியத் தூதராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|