யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
இந்தோனேஷியாவில் விமான விபத்து பலி 93 ஆக உயர்வு
ஜகர்த்தா (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009   ( 12:51 IST )
இந்தோனேஷிய ராணுவத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்கு உள்ளானதில், பலியானவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேஷிய விமானப் படையின் பேச்சாளர் பம்பாங் சுலிஸ்டியோ பேசுகையில், விமானப் படைக்கு சொந்தமான சி-130 ஹெர்குலஸ் விமானம், 112 பயணிகளுடன் இன்று காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஜாவா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகே விபத்திற்கு உள்ளானதாகக் கூறினார்.

துவக்கத்தில் 3 பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், மீட்புப் பணிகள் துவங்கிய பின்னர் பலி எண்ணிக்கை அபாயகரமான வகையில் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் 69 பேர் உயிரிழந்ததாக கூறப்ப்பட்டது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயணித்த இந்த விமானத்தில், 10 குழந்தைகளும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிறிலங்க படையினரால் பா.நடேசனின் மனைவி சுட்டுக்கொலை
கைதிகளை விடுவிக்க முயற்சி: பாக். படையினர் தாக்குதலில் 13 தீவிரவாதிகள் பலி
தடையற்ற வகையில் முகாம்களில் பணிபுரிய அனுமதி: யுனிசெஃப் கோரிக்கை
இந்தோனேஷியாவில் விமான விபத்து: பலர் பலி?
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: யு.எஸ். வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. ‘இரட்டை வேடம்’: பென்டகன்
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...