யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சிறிலங்க படையினரால் பா.நடேசனின் மனைவி சுட்டுக்கொலை
கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009   ( 10:53 IST )
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு சில நிமிடத்திலேயே அவரது மனைவியும் சிறிலங்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும், சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவனும் கடந்த 18ஆம் தேதி அதிகாலை 5.45 மணி வரை செய்மதி தொலைபேசி ஊடாக வெளித்தொடர்பில் இருந்தனர். அப்போது, சிறிலங்கப் படையினரிடம் சரணடைந்து விடுமாறு அவர்கள் இருவரும் வற்புறுத்தலாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின், மூன்றாம் தரப்பு ஒன்றினால் இந்த அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் முன்னேறி வந்த சிறிலங்க படையினரிடம் அவர்கள் இருவரும் சரணடைந்தனர். இவை எல்லாம் நடைபெறும் போது நடேசனின் மனைவியான விஜித்திரா நடேசனும் அவர்களுடன் இருந்தார்.

பின்பு, அவர்கள் இருவரும் சரணடையும் போது அந்த பகுதியில் இருந்து வெளியேறிய பொதுமக்களுடன் ஒன்றாக தானும் வெளியேறி சிறிலங்க படையினரிடம் தன்னை ஒரு சிங்களப் பெண் என அவர் அறிமுகம் செய்து கொண்டார்.

அந்த நேரத்தில் சரணடைந்த நடேசனையும், புலித்தேவனையும் சிறிலங்க படையினர் சுட்டுக்கொன்றனர். இதையறிந்து துடித்து அழுது கதறிய நடேசனின் மனைவி, தனது கணவர் உட்பட அரசியல் துறையைச் சேர்ந்தவர்கள் சரணடைந்த போது அவர்களைச் சுட்டுக்கொன்றது மிகவும் கொடூரமான ஒரு தவறு என சிறிலங்க படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த இடத்தில் இருந்த ஒரு சிங்கள செய்தியாளர் இதனை தெரிவித்திருக்கிறார்.

நடேசனின் மனைவி ஒரு சிங்களப் பெண்மணியாக இருந்ததால், அவர் சிங்கள மொழியிலேயே படையினருடன் வாக்குவாதம் செய்ததாகவும் ஒரு கட்டத்தில் அந்த வாக்குவாதம் உச்சக் கட்டத்தை அடைந்த போது சிறிலங்க படையினர் நடேசனின் மனைவியை நோக்கி சரமாரியாகச் சுட்டுக் கொன்றனர் எனவும் அந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.

சிறிலங்கா காவல்துறையில் நடேசன் காவலராக பணிபுரிந்த காலத்தில் தலைநகர் கொழும்பில் உள்ள நாரஹேன்பிட்டி காவல்நிலையத்தில் பணிபுரிந்த விஜித்திராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மாத்தறையைச் சேர்ந்தவர் விஜித்திரா. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர் இனப் படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும், அவரது மனைவியும் அங்கேயே வசித்து வந்தனர்.

அப்போது விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்ட நடேசன், தமிழ்நாட்டில் தங்கியிருந்து 1987 வரை அரசியல் பணிகள் செய்து வந்தார். கடந்த 1990இல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன், கடந்த 1991இல் தமிழீழ காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தொடங்கிய போது அதன் உருவாக்கப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

நடேசனின் மனைவி விஜித்திரா ஒரு சிங்களப் பெண்மணியாக இருந்த போதிலும் கூட, நடேசனின் அனைத்துப் பணிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதுடன், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளிலும், துன்பங்களிலும் ஒரு பங்காளியாக அவர்களுடனேயே வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கைதிகளை விடுவிக்க முயற்சி: பாக். படையினர் தாக்குதலில் 13 தீவிரவாதிகள் பலி
தடையற்ற வகையில் முகாம்களில் பணிபுரிய அனுமதி: யுனிசெஃப் கோரிக்கை
இந்தோனேஷியாவில் விமான விபத்து: பலர் பலி?
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: யு.எஸ். வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. ‘இரட்டை வேடம்’: பென்டகன்
இலங்கையில் அனைவருக்கும் சம உரிமை : ராஜபக்சே
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...