|
| கைதிகளை விடுவிக்க முயற்சி: பாக். படையினர் தாக்குதலில் 13 தீவிரவாதிகள் பலி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி, புதன்கிழமை, 20 மே 2009 ( 16:19 IST ) | |
பாகிஸ்தானின் மொஹ்மன்ட் பழங்குடியினர் பகுதியில் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
மொஹ்மன்ட் ஏஜென்ஸி பகுதியின் தலை நகரான காலானியின் மேற்குப் பகுதியில், காபஹ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்ட 5 அரேபியர்கள், லிபியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஒரு உள்ளூர்வாசியை பாதுகாப்பு படையினர் அங்கிருந்து காலானி கொண்டு சென்றனர்.
அப்போது 60 தீவிரவாதிகள் அடங்கிய கும்பல் அவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தி கைது செய்யப்பட்டவர்களை மீட்க முயன்றது. பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகள் மீது ஏவுகணைகளை வீசி பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து தப்பியோடியதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|