|
| தடையற்ற வகையில் முகாம்களில் பணிபுரிய அனுமதி: யுனிசெஃப் கோரிக்கை |
| நியூயார்க் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 16:17 IST ) | |
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுடைய முகாம்களில் முழுமையாகவும், தடையற்ற வகையிலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான அனுமதியை சிறிலங்க அரசாங்க வழங்க வேண்டும் என ‘யுனிசெஃப்’ வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக யுனிசெஃப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அன் எம்.வெனிமான் நேற்று பேசுகையில், முகாம்களில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு அவசரமாக உதவிகள் தேவையாக இருப்பதால் அந்த உதவிகள் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு அந்த முகாம்களுக்குச் சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.
நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலும், போசாக்கின்மையுடனும், காயங்களால் அவதிப்படும் நிலையிலுமே மக்கள் இந்த முகாம்களுக்கு வந்திருக்கின்றனர். இவ்வார இறுதியில் இந்த முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முகாம்களுக்கு தேவையாகவுள்ள குடிநீர், ஊட்டச்சத்து, தாய்-சேய் நலன், கல்வி, பாதுகாப்பு போன்ற விடயங்களில் மற்ற அமைப்புக்களுடன் இணைந்து செயல்படுவதற்கு யுனிசெஃப் தயாராக இருக்கிறது எனத் தெரிவித்த அவர், தண்ணீர் மற்றும் கழிவுகளை அகற்றும் வசதிகள் முக்கியமானவை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இவற்றைப் பெற்றுத் தருவதற்கான உதவிகளை வழங்க யுனிசெஃப் தயாராக இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்க படையினர் முதற்கட்டத் தாக்குதலை நடத்திய போது அங்கிருந்து வெளியேறிய சுமார் 2 லட்சம் பேர் வவுனியாவில் உள்ள முகாம்களுக்கு வந்திருந்தார்கள்.
இந்நிலையில் கடந்த வாரம் முதல் இடம் பெற்றுவரும் 2ஆம் கட்டத் தாக்குதலில் மேலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கிருந்து வெளியேறியிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வவுனியாவில் உள்ள முகாம்களிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|