|
| இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: யு.எஸ். வலியுறுத்தல் |
| வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 11:04 IST ) | |
இலங்கையில் நிலையான அமைதி ஏற்பட தமிழர்கள், சிங்களர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் ராணுவ ரீதியாக வெற்றி பெற்று விட்டதாக சிறிலங்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் இயான் கெல்லி விடுத்துள்ள அறிக்கையில், பயங்கரவாதத்தை உண்மையிலேயே சிறிலங்க அரசாங்கம் தோற்கடிக்க வேண்டுமென்றால், கடந்த காலத்தில் நடந்த போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றும் வகையில் ஒருங்கிணைந்த, வளமான, ஜனநாயக இலங்கையை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் நிலையான அமைதி ஏற்பட வேண்டுமென்றால் தமிழர்கள், சிங்களர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வு ஒன்றை உருவாக்கி இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் இயான் கெல்லி கூறியுள்ளார்.
சிறிலங்காவில் போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டாலும், போர் நடந்த பகுதியில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை பற்றி அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|