யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. ‘இரட்டை வேடம்’: பென்டகன்
வாஷிங்டன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 மே 2009   ( 19:10 IST )
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் நட்புறவு வைத்துள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் குற்றம்சாற்றியுள்ளது.

இதுதொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அமெரிக்க ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் அளித்துள்ள பேட்டியில், அல்-கய்தா பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் போரில் யார் ஜெயிப்பார்கள் என்று பாகிஸ்தானுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.இதன் காரணமாக எல்லைப் பகுதியில் என்ன நடக்கும் என்றும் அவர்களுக்கு (பாகிஸ்தான்) புலப்படவில்லை.

எனவே, இருதரப்பினரிடமும் (அமெரிக்கா, அல்-கய்தா) நெருக்கமான உறவை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது என ராபர்ட் கேட்ச் கூறியுள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்க கூட்டுப்படைகளின் தலைவர் மைக் முல்லன் அந்நாட்டு பாதுகாப்பு நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானில் அல்-கய்தா தலைவர்கள் உள்ளதால் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது.எனவே அல்-கய்தாவை தோற்கடிப்பதே பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இலங்கையில் அனைவருக்கும் சம உரிமை : ராஜபக்சே
ஸ்வாட் மக்கள் அவதி: பாக். ராணுவம், தாலிபான்களுக்கு கண்டனம்
பாதுகாப்பு வளையப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன ?
பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவிப்பு
பிரபாகரன் நலமாக இருக்கிறார் : புலிகள் அறிவிப்பு
விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக வென்றுவிட்டோம் : சரத் பொன்சேகா
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...